டெட் பூல் 2 திரைப்படம் ரிவியூ (Dead Pool 2 Movie review)

80 % மக்கள் இப்படத்தை விரும்புகின்றனர் 

கதை எங்கப்பா !!!

படத்தின் கதை: 

           இப்படத்தில்  கதை என்று எதுவுமில்லை. ஆனால் படத்தின் முதல் காட்சியில் டெட்  பூலின் (கதாநாயகன்) காதலியை ஒரு கும்பல் கொலை செய்து விடுகிறது. எனவே துக்கம் தாங்க முடியாத நமது ஹீரோ தற்கொலைக்கு முயற்சி  செய்து தோற்று போகிறார். ரஸ்ஸல் என்ற சிறுவன் மூலம் தான் டெட் பூல் தன் வாழ்வின் நோக்கம் என்று நினைத்து, அந்த சிறுவனை தேடி செல்லும் கதை தான் இந்த டெட்  பூல்.

படத்தின் ரிவியூ: 

         மொத்த படமும் ஹீரோவின் காமெடி, சாகஸம் மற்றும் மொக்கை போடும் டயலாக் என்று எடுக்கப்பட்டுள்ளது, கதை இல்லாமல் படத்தின் விறுவிறுப்பும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

 பல இடங்களில் நமக்கே படம் சலிப்பைத் தட்டி விடும். திரைக்கதையிலும் பலம் இல்லை.

படத்தில், ஹீரோ தனக்கென ஒரு டீம்மை உருவாக்க இன்டெர்வியூ காட்சி மற்றும் இதுபோன்ற சில இடங்களில் நம்மை ரசிக்க வைக்கிறது.

டெட் பூல் வில்லனை மட்டுமல்ல, நம்மையும் பேசியே கொல்லுகிறார். நம்ம ஊரு விஜயகாந்த் படம் மாதிரி, பேசியே கெட்டவனை, நல்லவனாக்கும்   கதை!

தமிழ் டப்பிங் அந்த அளவிற்க்கு மோசமில்லை. எனவே தான் தமிழில்  கூட கொஞ்சம் மொக்கை போடாமல் நகர்கிறது.

மொத்தத்தில் இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்; ஆனால் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், படத்தில் வன்முறை, ரத்தம், கேட்ட வார்த்தை என்று நிறையவே உள்ளது.

– கணேஷ்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *