கூட்டத்தில் ஒருவன் – திரைப்படம் (koottathil oruvan – movie review)

கூட்டத்தில் ஒருவன் – திரைப்படம்

koottathil oruvan – movie review

    நம் வாழ்வில் சாதணை என்பது வேலை, திருமணம் மற்றும் பணம் சம்பாதித்தல் போன்றவைகள் அல்ல; சமுதாயத்தை சீர்திருத்தும் தன்னலமற்ற வெற்றியே உண்மையான சாதணை என்று இப்படம் உணர்த்துகிறது. இப்படத்தின் கதை என்னவென்றால், சுமாரான ஹீரோ சூப்பரான ஹீரோயினை காதலிக்கிறார். இந்த சுமாரான ஹீரோவை போலியாக சூப்பர் வடிவில் காட்டி, ஹீரோயினை காதல் வலையில் சிக்க வைக்க உதவுகிறான் கட்டப்பஞ்சயாத்து செய்யும் ஒரு ரவுடி. ஹீரோவின் போலியான முகம் ஒரு காலகட்டத்தில் வெளிச்சத்துக்கு வருகிறது. அதனால் ஹீரோவை ஹீரோயின் வெறுத்து ஒதுக்குகிறார். கிளைமாக்ஸில் எப்படி ஹீரோ தன் வாழ்வில் சாதனை செய்கிறார் என்பது தான் படம்.


புதுமையான கதை தான் என்றாலும் புதுமைகள் இல்லாத காட்சிகளிம், திரைக்கதையும் படத்தின் விறுவிறுப்பை குறைத்து சலிப்பை ஏற்படுத்துகிறது, திரைக்கதையை கொஞ்சம் சுவாரஸ்யமாக மாற்றி அமைத்திருக்கலாம். 

கதையின் போக்கில் போதுமான அழுத்தம் இல்லை என்பது இப்படத்தின் மைனஸ் என்று சொல்லலாம். பாடல்கள் மற்றும் இசை மிகவும் சூப்பர் என்று சொல்லமுடியாது ஆனால் நன்று; பரவாயில்லை.

ஹீரோவின் நடிப்பு போதவில்லை. ஆளமான உணர்ச்சி பொங்கும் காட்சிகளில் கூட ஹீரோவின் உணர்வற்ற முகம் புரியாத புதிராக உள்ளது. ஹீரோயின் நடிப்பு நன்று. ஆனால் பள்ளி மாணவி & கல்லூரி மாணவி கதாபாத்திரம் சிறிதும் போருந்தவில்லை. நன்றாக எடுக்க வேண்டிய படம்; ஆனால் பல இடங்களில் சொதப்பியுள்ளனர். எனவே மக்கள் மந்தில் இடம் பிடிக்க தவறிவிட்டது. டைமிங் காமெடி நம்மை சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறது. ஆனால் சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது.      


உணவை வீணாக்க கூடாது. வீணாகும் உணவை சரியாக பயன்படுத்தினால், பலரின் பசியை போக்கும் என்பதே இப்படத்தின் மேசேஜ்.
ஆக, கூட்டத்தில் ஒருவன் என்றுமே கூட்டத்தில் ஒருவனே.

ஹீரோ, ஹீரோயின்: அசோக் செல்வன், பிரியா ஆனந்த்

இயக்குனர்: டி.ஜே. ஞானவேல்

இசை: நிவாஸ். கே. பிரசன்னா

மொழி: தமிழ்

வெளியான வருடம்: 2017.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *