மீசைய முறுக்கு – திரைப்படம் (ஒரு பார்வை) – Meesaiya Murukku – Movie review

மீசைய முறுக்கு – திரைப்படம் (ஒரு பார்வை)Meesaiya Murukku – Movie review

                             கனவுகளை சுமந்து கொண்டு சாதிக்க துடிக்கும் இளைய தலைமுறையினருக்கான படம் இது.

. இப்படத்தில் சொல்ல வந்த மேசேஜ் என்னவென்றால், “தோல்வியிலும் கலங்காமல் நெஞ்சை நிமிர்த்தி நில்” என்பது தான்.

 சரி, திரைக்கதையை பொருத்தவரை சூப்பர் என்று சொல்ல முடியாது. ஆனால் நன்று.

இப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா புகழ் ஆதி இசையில் மட்டுமல்ல; நடிப்பிலும் நன்று.

 அவர் இப்படத்தில் நடிக்கவில்லை. அவரின் வாழ்வின் கதையில் மறுமுறை வாழ்ந்திருக்கிறார்.

 எதார்த்தமான வாழ்வின் சம்பவங்களை சிறிது கற்பனை மேருகேற்றி கதையாக அமைத்துள்ளனர். நடிகர் விவேக் 

அவர்கள் தந்தை கதாபாத்திரத்தில் வலம் வருகிறார்.

“வாழ்கையில் தோற்றாலும் ஜெயித்தாலும் மீசைய முறுக்கனும்” 

என்று வசனம் பேசி மீசைய முறுக்கும் காட்சிகளில், நம்மை அறியாமல் நம்மையும் மீசையை முறுக்க வைத்துள்ளார். 

பாடல்கள் அனைத்தும் ஹிப் ஹாப் ஸ்டைலில் அசத்தல். அதிலும் “கிரேட் ஜி, கிரேட் ஜி”, “வாடி புள்ள வாடி”..”

கிளப்புல மப்புல” பாடல்கள் ரசிக்க வைக்கிறது

. படத்தில் நகைச்சுவை என்னும் யுக்தியை சரியாக 

கையாண்டுள்ளனர் படத்தின் சில இடங்களில் போதுமான அழுத்தமும், உணர்வும் இல்லை.

கனவுகளுக்காக வாழ்கையை விடுவதா? அல்லது வாழ்கைக்காக கனவுகளை கலைப்பதா? என்ற கேள்விக்கு படத்தின் முடிவில் நமக்கு விடை கிடைக்கிறது.

மொத்தத்தில் மீசைய முறுக்கிக் கொண்டு படத்தை பார்க்கலாம்.

ஹீரோ, ஹீரோயின்: ஹிப் ஹாப் தமிழா, 

ஆத்மிக்கா 

இசை: ஹிப் ஹாப் தமிழா

இயக்குனர்: ஹிப் ஹாப் தமிழா 

மொழி: தமிழ்   

வெளியான வருடம்: 2017

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *