துப்பறிவாளன் – திரைப்படம் – Thupparivaalan – Movie review

துப்பறிவாளன் – திரைப்படம்
Thupparivaalan –  Movie review

         மேற்கத்திய  நாடுகளில் ஒன்றான பிரிட்டனை சார்ந்த சர் ஆர்தர் கோனன் டோயல் (Sir Arthur Conon Doyale) என்பவரால்  எழுதப்பட்ட கதைகளில் முக்கிய கதாபாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸ் போன்ற ஷ்டைலில் இப்படத்தின் கதாநாயகன் விஷால் தோன்றுகிறார்.

இப்படத்தின் கதை என்னவென்றால், பணத்துக்கு ஆசைப்படாத மற்றும் செய்யும் தொழில் மீது ஆர்வமுடைய துப்பறிவாளன் தன்னிடம் வரும் ஒரு கேஸை எடுத்துக் கொள்கிறார். அந்த கேஸ் என்னவென்றால், நாய் துப்பாக்கி குண்டு அடி  பட்டு இறந்துவிடுகிறது. இந்த கேஸை எடுத்து ஹீரோ தன்  பயணத்தை துவங்க, அது பல மர்மமான கொலைகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.


  மிஷ்கின் அவர்களின் இயக்கத்தில் அவருக்கே உண்டான ஷ்டைலில் செதுக்கியுள்ளார். எனினும் விஷால் சிறிது கதாபாத்திரத்தில் செட்டாக சிரமப்  பட்டுள்ளதாக தெரிகிறது. ஹீரோயினுக்கு ஆரம்ப காட்சிகளில் அவ்வளவு அழுத்தம் இல்லை என்றாலும் கதையின் கிளைமாக்சில் ஹீரோயினை வைத்து தான் அடுத்த சீனுக்கே போகிறது. வழக்கம் போல பாடல்களே இல்லாமல் படத்தின் காட்சி அமைப்புகளுக்கு அதிகம் கவனம் செலுத்தியுள்ளார் மிஷ்கின் அவர்கள். படத்தின் மைனஸ் என்னவென்றால், படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வரையிலும் படத்தின் கதை புரியாமல் நகர்கிறது. இறுதி காட்சி பத்து நிமிடத்தில் மொத்த கதையும் சொல்லப்படுகிறது.


இயக்குனரின் கதை சொல்லும் ஷ்டைலை கொஞ்சம் இந்த படத்திலாவது மாற்றி அமைத்திருக்கலாம். அறிவியல் பூர்வமாக கொலைகள் செய்யப்படுவது இப்படத்தின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துகிறது. எந்த ஒரு காட்சியிலும் விறுவிறுப்பு குறையவில்லை என்பது இப்படத்தின் பக்கபலம். ஆயினும் படத்தின் விறுவிறுப்பு கிளைமாக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்துள்ளது.


மொத்தத்தில் துப்பறிவாளன் நன்றாக துப்பறிகிறான்!


– கணேஷ் 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *