மெர்சல் திரைப்படம் (Mersal Movie review)

மெர்சல் திரைப்படம் (Mersal Movie review)

   மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகளை பற்றிய எச்சரிக்கையையும், நல்ல தரமான மற்றும் இலவச மருத்துவ சிகிச்சை அனைவருக்கும் கிடைக்க செய்வது அரசின் கடமை என்ற செய்தியையும் பின்னணியாகக் கொண்ட திரைப்படம் தான் மெர்சல். படத்தின் கதை ஹீரோவின் அப்பாவை வில்லன் கொலை செய்ய, அதற்காக ஹீரோ பழி வாங்குவது என வழக்கமான கதை தான் என்றாலும் திரைக்கதை அமைக்கப்பட்ட  விதம் நன்றாக  உள்ளது. இயக்குனர் அட்லீ அவர்களுக்கு இது கண்டிப்பாக ஒரு வெற்றிப்படமாகவே  அமையும்.

நடிகர் விஜய் அவர்களின் நடிப்பு நன்றாக உள்ளது குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் நம்மை அழ வைக்கும் படி அவரின் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் நம் மனதில் அவ்வளவாக பதியவில்லை. விஜய் அவர்களுக்கு நேர் எதிர் வில்லனாக எஸ். ஜே.  சூர்யா அவர்களும் கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்துள்ளார்.

நடிகர் சத்தியராஜ் அவர்களும்  இன்வெஸ்டிகேஷன் ஆபீஸராக வலம் வந்து அவருக்கே உண்டான பாணியில் ஒரு கலக்கு கலக்கியுள்ளார். படத்தின் மைனஸ் என்னவென்றால், விபத்துக்கள் மற்றும் ஆபரேஷன் செய்யும் காட்சிகள் வருவதால், ஒரு விதமான உணர்வை ஏற்படுத்துகிறது. ஆயினும் இந்த காட்சிகள் இல்லை என்றாலும் இப்படத்தின் கருத்து மக்கள் மனதில் அழ பதியாது.

இசை மற்றும் பின்னணி இசையில் கொஞ்சம்  கவனம் செலுத்தியிருக்கலாம். வாசனங்கள் பொருத்தமட்டில், மிக மோசம் என்று சொல்ல முடியாது ஆனால் பரவாயில்லை. முன்று ஹீரோயின்கள் உள்ளனர் இப்படத்தில்; சமந்தா, காஜல் மற்றும் நித்தியா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். அவரவர்களுக்கு ஏற்ற கதாபாத்திரத்திற்கு தகுந்தாற் போல கதையில் பொருத்தியுள்ளார்  இயக்குனர். மூன்று கதாநாயகிகளுக்கும் கதையில் சரியான அளவு கேரக்டர் உள்ளது. முக்கியமாக, நாட்டு நிலவரங்களையும், அரசியல்  நிலவரங்களையும் பற்றிய கருத்துக்கள் தெரிவிக்க தனி தைரியம் வேண்டும். இவர்கள் சற்று தைரியமாகவே தெரிவித்துள்ளனர். 

மொத்தத்தில் மெர்சல் பார்த்து ரசிப்பதற்கு மட்டுமல்ல சிந்திக்கவும் தான். அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் தான்.  

                                                                                  –  கணேஷ் 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *